Close
செப்டம்பர் 20, 2024 4:08 காலை

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் அதன் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்  (DISHA) தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்  தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா  முன்னிலையில் (14.06.2023) நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் (DISHA) தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 45 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் புதன்கிழமை ஆய்வு மேற்;கொள்ளப்பட்டது.

மேலும் இக்கூட்டத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் திட்டம், பாரத பிரதமரின் கிஸான் சம்மான் நிதித் திட்டம், மண்வள அட்டை இயக்கம், பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம், பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கம் – தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம்,

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், மின்னணு தேசிய வேளாண் சந்தை, ஊரக மின் மயமாக்கல் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம், தேசிய சுகாதார இயக்கம், பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிசன், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட 45 திட்டப் பணிகள் விவரங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம், செலவு செய்யப்பட்ட நிதி விபரம், பணி முன்னேற்றம் மற்றும் நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்றப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடை யும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத்  தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் மற்றும்; அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top