நம்பியூர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் உள்ளி விழவு என்னும் கொங்கு 42 -வது பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்ட நிகழ்ச்சி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் என்.எஸ். சிவராஜ் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கே.கே .சி. பாலு, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், வேல்முருகன், மேற்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொருளாளர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் ஆகியோர் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேசிய போது: பெருஞ்சலங்கை ஆட்டத்தை கடந்த 2009 -ஆம் வருடம் மேடை நிகழ்ச்சிகளில் நடத்தி வந்தோம். தற்போது கொங்கு பகுதியில் பழமையான கலாசார நிகழ்ச்சியான பெருஞ்சலங்கை ஆட்டத்தை ஒவ்வொரு கிராமம் தோறும் மிக சிறப்பாக நடத்தி வருகிறோம்.
இதன் மூலம் ஒரு புத்துணர்ச்சி, ஒருங்கிணைப்பு,உடலுக்கு உடற்பயிற்சியும் இந்த பெருஞ்சலங்கை ஆட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இதை அனைத்து கிராம பகுதிகளுக்கும் கொண்டு செல்ல நாங்கள் தீவிரமாக செயல் பட்டு வருகிறோம் என கூறினார்.
நம்பியூர் யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி யில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் நம்பியூர் ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், ஆதன்பொன் செந்தில் குமார், கோகுல் மற்றும் மகளிர் அணி நிர்வாகி
கள் பலர் கலந்து கொண்டனர்.