தவறான சிகிச்சையால் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த ராஜேந்திர புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா. வேன் ஓட்டுனரான இவருடைய கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யாவை, அறந்தாங்கி அறிஞர் அண்ணா மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ஒவ்வொரு மாதமும் மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள் ஐஸ்வர்யா வுக்கு அறுவை சிகிச்சை செய்ததன் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது என்று தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சை செய்து சிறிது நேரத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் ஐஸ்வர்யா நலமாக இருந்த தாக கூறப்படுகிறது மறுநாள் அதிகாலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா மயக்க நிலையில் இருந்துள்ளார். அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறியதால் உறவினர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று அறுவை சிகிச்சை செய்து நலமுடன் இருந்த ஐஸ்வர்யா மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தவறான சிகிச்சையால் தான் ஐஸ்வர்யா இறந்து விட்டதாக புகார் கூறியதுடன் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவ மனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத் தால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இரண்டு பெண் குழந்தைகளுக்கு உரிய நிவாரணமும் இறந்த பெண்ணின் கணவருக்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி யில் வேலையும் வழங்குவதாகவும் சம்பந்தப்பட்ட உறவினர் களிடம் தலைமை மருத்துவர் உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது