Close
நவம்பர் 21, 2024 11:14 மணி

ஊரக வளர்ச்சி – ஊராட்சித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள்

புதுக்கோட்டை

திருமயம் அருகே லெம்மபலக்குடியில் ஆய்வு மேற்கொண்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், ஆணையர் தாரேஸ் அஹமது , மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.செந்தில்குமார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  முன்னிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அஹமது ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர்  செந்தில்குமார் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  கிராமப்புறங்களில் உள்ள பொது மக்கள் முன்னேறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்தவகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

திருமயம் ஒன்றியம், லெம்பலக்குடியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினையும், புதிதாகக் கட்டப்பட்டுவரும் திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடப் பணியினை யும்,

திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்யப் பட்டது. மேலும் கட்டுமானப் பணிகளின் தன்மை குறித்தும் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும், உயர்ந்த தரத்து டனும் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார்  தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அஹமது  ஆகியோர், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில், அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் சமையல் கூடம் கட்டும் பணி, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், சமத்துவபுரம் புனரமைத்தல், பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டு நிதி, குடிநீர் திட்டப் பணிகள், 15 -வது நிதிக்குழு மானியத் திட்டப் பணிகள்.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப் பணிகள் உள்ளிட்டவை கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மேற்காணும் பணிகளுக் காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி குறித்தும், செலவினம் குறித்தும், பணிகளின் தன்மை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிறைவாக, பணிகள் அனைத்தும் உரிய தரத்துடன், குறிப்பிட்ட காலத்திற்குள்  முடித்து  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வுகளில், ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் கள் எம்.பிரசாந்த்,  சுமதி, ராஜஸ்ரீ, ஆனந்தராஜ், இணை இயக்குநர் சந்தோஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர்  ரேவதி, ஊரக வளர்ச் சித்துறை முதன்மை பொறியாளர் குற்றாலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top