Close
செப்டம்பர் 19, 2024 11:15 மணி

வேங்கைவயல் கிராமத்தில் ஒருநபர் விசாரணை ஆணையம் கள ஆய்வு

புதுக்கோட்டை

வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தலைவர் சத்தியநாரயணா தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் ஓய்வுபெற்ற  உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன் தலைமைலில் , மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, முன்னிலையில் இன்று (21.06.2023) அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.

வேங்கைவயல் நிகழ்வு குறித்து, உயர்நீதிமன்றத்தால் ஓய்வுபெற்ற  நீதியரசர் எம்.சத்தியநாராயணன்  தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 06.05.2023 அன்று முதற்கட்டமாக வேங்கைவயல் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன்படி  வேங்கைவயல் நிகழ்வு தொடர்பாக கடந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பொது சுகாதாரத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில், ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன்  கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top