புதுககோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் இளமுருகுமுத்து தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் சம்பவம் நடந்து 182 நாட்கள் கடந்த பிறகும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வில்லை.
பெரியார் பிறந்த மண், பகுத்தறிவு மண் என்ற பெருமைக் குரிய தமிழ்நாட்டில் வேங்கை வயல் சம்பவம் ஒரு கரும்புள்ளி
கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி சம்பவம் நடந்த பின்னர் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி, மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர், டி ஜி பி ஆகியோரிடம் நேரில் நாங்கள் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் டில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அவர்களும் தமிழக அரசிடம் அறிக்கை கேட்பதாக கூறியுள்ளனர். மேலும் அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஐநா சபை மனித உரிமை ஆணையத்தில் கடந்த 12ஆம் தேதி புகார் மனு அளித்துள்ளோம். புகார் மீது அவர்கள் தமிழரசுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னும் தமிழகத்தில் இந்த அவலத்திற்கு அரசும் காவல் துறையும் நடவடிக்கை எடுக்காது வேதனை அளிக்கிறது. ஐநா மனித உரிமை ஆணையம் தலையிடு முன்னர் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடைய குற்றவாளிகளை விசாரணை செய்யாமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது விசாரிக்கின்றனர் டிசம்பர் மாதம் 26 -ஆம் தேதி வேங்கை வேல் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்திய குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
30 -ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் அங்கு சென்று மனிதக் கழிவை தேடி ஏதோ ஒன்றை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.உலகிலேயே மனித மலத்தை கொண்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பது இங்குதான். குற்றவாளிகளில் பாதுகாப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களை துன்புறுத்துவதிலும் தமிழக அரசு செலுத்துவது வன்மையாக கண்டிக்கிறோம்.
விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணைய நீதிபதி வேங்கைவயலுக்கு நேரில் வந்து விசாரித்து சென்றுள்ளார் அப்போது விசாரணை சரியான திசையில் செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தவில்லை .அவர் அறிக்கை வெளியிட்ட பிறகே அதைப்பற்றி கூற முடியும். ஐநாவில் புகார் தெரிவித்துள்ளோம். அதற்கு முன்னால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேங்கைவயல் பிரச்னையில் ஆளுங்கட்சியான திமுக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் அதிமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் இப்பிரச்சனையில் சரியாக தலையிடவில்லை . எல்லோருமே ஜாதி அரசியல் தான் செய்கின்றனர்.
மனித உரிமை மீறல்கள் குறித்து மனித உரிமை ஆணையம் அரசுக்கு கேள்வி கேட்கும். அதன்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வேங்கை வயல் பிரச்சினை குறித்து நான் பேசுவதற்கு டைம் ஸ்லாட் கேட்டுள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, தலைமைச் செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர் எஸ்சி -எஸ்டி ஆணையம், மனித உரிமை ஆணையம் ஆகியோரை நேரில் சந்திக்க முடிந்தது. ஆனால், முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டும் நேரம் ஒதுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து ஜாதி வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்பிக்க வைக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் துணை போகின்றன. வேங்கை வயல் பிரச்சனையில் நீதி கிடைக்கும் வரை ஜெனிவா வரை சென்று போராடுவோம் என்றார் அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து