Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: தஞ்சை ஆட்சியர் தொடக்கம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  (26.06.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்டஆட்சியர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜூன் மாதம் 26  -ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனை முன்னிட்டு சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் மாநகராட்சி ரயில் நிலையத்திலிருந்து அண்ணா கலையரங்கம் வரை அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆதிசங்கரர் தொழிற்பயிற்சி நிலையம், சேவியர் தொழிற் பயிற்சி நிலையம்,

அவர் லேடி நர்சிங் கல்லூரி, கண்டியூர் பயோகேர் பயிற்சி நிறுவனம்,பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, ஈச்சங்கோட்டை அரசு வேளாண் கல்லூரி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி,அரசர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் போதை ஒழிப்பு வாசகம் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளுடன் உடன் இப்பேரணி நடைபெற்றது.இப்பேரணி மூலம் பொது மக்களுக்கு போதைப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

எனவே இதன் மூலம் பயனடைந்து போதை ஒழிப்பு மாவட்டமாக மாற்றி அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இப்பேரணியில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர்  ஆஷிஷ் ராவத், உதவிஆணையர் கலால் பழனிவேல், நகரகாவல் துணை கண்காணிப்பாளர்  ராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர்  டேவிட் டேனியல், வட்டாட்சியர் சக்திவேல், கோட்ட கலால் அலுவலர்கள் அருணகிரி, சுமதி,செல்வம், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top