புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புதின த்தை ஒட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு பள்ளி முதல்வர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை மையமருத்துவர் எஸ். ஆறுமுககுமரன் பங்கேற்று,போதைப் பொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள் பற்றி பேசியதாவது:
உலகத்தில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நோய்களில் புற்றுநோய் ஒன்று அதில் புகையிலை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் புற்றுநோய் வாய் புற்று நோய் ஆகும். போதை பொருட்களான புகையிலை ,ஹான்ஸ் பீடி, சிகரெட் இவைகள் அதிகம் ஆண்களை பாதிக்கும் புற்றுநோய் காரணிகளாகும்.
அதனை முழுமையாக குறைக்கவும் தடுக்கவும் முடியும். குறிப்பாக ஆண்கள் பயன்படுத்தும் மெல்லும் வகை போதை பொருட்கள் விரைவில் மனிதனை பாதிக்கும். அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். அதை அறவே பயன்படுத் தவும் கூடாது.
இளம் வயதினரான மாணவப் பருவத்தில் அதிகம் இது போன்ற போதை பொருட்களை விளம்பரங்கள் வாயிலாக மாணவர்கள் கற்றுக் கொள்வதை கைவிட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகையிலை கம்பெனி மற்றும் போதை பொருட்கள் அதிகம் இருப்பதால், முற்றிலும் இந்நாளில் இருந்து கைவிடுவதற்கு உறுதிமொழி ஏற்க அனைவரும் முன்வர வேண்டும்” தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, பரிசோதனை மைய திட்ட அலுவலர் வெங்கடேஷ், புதுக்கோட்டை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், மற்றும் முதுகலை விலங்கியல் ஆசிரியர் காந்தி ஆகியோர் போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூறி ‘உங்கள் போதை புத்தக வாசிப்பில் இருக்கட்டும்’ என்று கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக துணை முதல்வர் இன்பராஜ் வரவேற்புரையாற் றினார். நிறைவாக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் முதுகலை ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.இறுதியில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.