Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம்.

புதுக்கோட்டை

ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள்ஒழிப்புவிழிப்புணர்வுக்கூட்டத்தில் பேசிய காவல் ஆய்வாளர் சங்கீதா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு நாளை முன்னிட்டு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

சர்வதேச அளவில் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலகநாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டு தோறும் ஜூன் 26ஆம் நாள் சர்வதேசபோதைப் பொருள் ஒழிப்புமற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தவகையில் திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் சங்கீதா, கலந்து கொண்டு மேல்நிலை வகுப்பு மாணவர் களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அவர்பேசும்போது, இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது. ஆகவே இளைஞர்கள் பாரதியின் கூற்றுக்கிணங்க ஒளிபடைத்த கண்களும், உறுதிகொண்ட நெஞ்சமும் உடையவர்களாக உடலும் மனதும் ஆரோக்கியத் தோடு விளங்க வேண்டும்.

இளைஞர்கள் போதையின் பாதையில் சென்று  வாழ்க்கை யைசீரழித்துக் கொள்ளக் கூடாது. போதைப் பொருள்களை பயன்படுத்துவோர் அவர்களை மட்டுமல்லாமல் தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தையும் சீரழிக்கின்றர்.

சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத அளவுக்கு அதற்கு அடிமையாகி உள்ளனர். இன்றைய சூழலில் இளைஞர்கள் மட்டுமல்லாமல்,  பள்ளி மாணவர்களும் போதைப் பொருளுக்கு அடிமையாவது வருத்தமான விஷயமாகும்.

மாணவர்களாகிய நீங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு நல்லமுறையில் படித்து முன்னேற வேண்டும். உங்கள் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் யாரேனும் போதை பழக்கத்திற்கு ஆளாகியிருந்தால் நல்ல முறையில் எடுத்துச் சொல்லி அவர்களை அந்தப் பழக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.

உங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் யாரேனும் எங்கேனும் போதைப் பொருள் விற்கின்றார்கள் என்று கேள்விபட்டால் தயங்காமல் 100 என்ற எண்ணிற்கு அழைக்கவும். அதன் மூலம் ஒருதனி மனிதனை மட்டுமல்ல ஒரு குடும்பத்தை ஒரு சமுதாயத்தை போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்றும் புண்ணியத்தை தேடிக் கொள்கின்றீர்கள்.

இன்றைக்கு போதைப் பொருள் ஒழிப்பு நாளில் போதைப் பழக்கங்களைப் புறந்தள்ளும் உறுதிமொழி ஏற்று மாணவப் பருவத்திலேயே சமூக அக்கறையோடு செயல்பட்டு போதைப் பொருள்களை ஒழிக்கும் விழிப்புணர்வோடு மாணவர்கள் விளங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில், துணைமுதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top