Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

தஞ்சாவூரில் மாவட்ட திட்டமிடும் குழுக்கூட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாநகராட்சி மாவட்டஊராட்சி அலுவலக பனகல் கட்டிட கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழுக் கூட்டம்  மாநிலங்களவைஉறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ,மாவட்ட ஆட்சித்தலைவர்.தீபக் ஜேக்கப் ,சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன்  (திருவையாறு), டிகே.ஜி.நீலமேகம்  (தஞ்சாவூர்) ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தலைமையில்  (28.06.2023) குழு உறுப்பினர்களுடன் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட திட்டக் குழுவானது 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது கிராமஊராட்சி வளர்ச்சித் திட்டம்,வட்டார ஊராட்சி வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றைத் தொகுத்து மாவட்டஅளவில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் பணியினை மேற்கொள்ளுதல். மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனிதவளம் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல் பணியினைசெய்தல்,

ஊரக மற்றும் நகர்ப்பகுதி உள்ளாட்சிஅமைப்புகள் மற்றும் சார்புத் துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சிமற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்திட வரைவுத் திட்டங்கள் தயாரித்தல் மற்றும் அவைபற்றி விவாதித்து ஒருங்கிணைந்த அடிப்படைவசதி வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிக் காக்க உதவுதல்,

மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்படசெயல் படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், பணிகளின் செயலாக்கத்தையும் கண்காணித்து ஆய்வு செய்தல் போன்றசெயல்கள் மாவட்ட திட்டக் குழுவின் செயலாக்கம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட திட்டக் குழுவில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் ,கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) .என்.ஓ.சுகபுத்ரா. கூடுதல் ஆட்சியர (வளர்ச்சி) .எச்.எஸ்.ஸ்ரீகாந்த் , துணைமேயர் மரு.அஞ்சுகம் பூபதி அவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top