Close
நவம்பர் 22, 2024 4:21 காலை

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் முகாம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டப் பயனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்முகாம் நடத்தப்படும்.

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பல வருடங்கள் கடந்தும் வைப்புத்தொகை இரசீதுகள் கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள், 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வுத் தொகை கிடைக்கப் பெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் கீழ்க்கண்ட உரிய சான்றுகளோடு ஆஜராகி இச்சிறப்பு குறைதீர்; முகாமில் பயன்பெறலாம்.

இத்திட்டத்தில் பதிவு செய்து நாளது தேதிவரை வைப்புத்தொகை இரசீதுகள்,கிடைக்கப்பெறாத பயனாளிகள் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்த ஒப்புகை இரசீதுடன் கூடிய இணையவழி விண்ணப்பத்துடன் இச்சிறப்பு முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் பதிவு செய்து வைப்புத்தொகை இரசீது பெற்று, 18 வயது பூர்த்தியடைந்த முதிர்வுத்தொகை கிடைக்கப் பெறாத பயனாளிகள், வைப்புத் தொகை பத்திர நகல். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல். பயனாளியின் நடப்பில் உள்ள வங்கிக்கணக்கு முகப்புப் புத்தக நகல். பயனாளியின் (தாய் மற்றும் மகள்) வண்ணப் புகைப்படம் – 2  ஆகிய சான்றுகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top