Close
ஏப்ரல் 5, 2025 6:51 காலை

அன்னவாசல் அருகே நீரில் மூழ்கி 2 சிறுமிகள் பலி : சின்னதுரை எம்எல்ஏ நேரில் ஆறுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே இரும்பாளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் கூத்தாணிப்பட்டி. இக்கிராமத்தில் பாண்டின்-சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களுக்கு நிவேதாஸ்ரீ(7), தஷ்விகா(2) ஹரணி(8மாதம்) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அதே ஊரில் கல்குவாரிக்காக வெட்டிய பள்ளத்தில் வழங்கம்போல குளிப்பதற்காக சிவரஞ்சனி தனது மூன்று பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். குளிக்கும்போது நிலைதடுமாறி சிவரஞ்சனி மற்றும் மூன்று குழந்தைகளும் ஆழமான பள்ளத்தில் நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் நோக்கில் வெளியே தூக்கியுள்ளனர். இதில் நிவேதாஸ்ரீ(7), ஹரிணி(8மாதம்) ஆகிய இரண்டு சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். ஆபத்தான நிலையில் தாய் சிவரஞ்சனி(32) தஷ்விகா(2) ஆகியோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் ரகுபதி உள்ளிட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரு பவர்களைப் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவும், நடந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவும் அறிவுறுத் தினார். அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top