Close
செப்டம்பர் 19, 2024 10:50 மணி

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் ஒரே நேரத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டையில் 6 வது  புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு 3 லட்சம்  பேர் பங்கேற்ற மாபெரும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு வியாழக்கிழமை (6.7.2023) நடைபெற்றது

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10  நாட்கள்  வரை  6  வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நடத்தவுள்ளன.

இதனை முன்னிட்டு, 2.5 இலட்சம் நபர்கள் பங்கேற்ற மாபெரும் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” நிகழ்வினை, மாவட்ட ஆட்சியர்  ஐ.சா.மெர்சி ரம்யா (06.07.2023) தொடக்கி வைத்து, மாணவிக ளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

புதுக்கோட்டை
புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது.

அதன்படி, நடப்பாண்டில் 6 -ஆவது புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 3 லட்சம் பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொது இடங்களில் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற மாபெரும் நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேர நிகழ்வு  தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகத் திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவாற்றவும் உள்ளனர்.

புதுக்கோட்டை

புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புத்தகம் படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்வு  நடத்தப்பட்டுள்ளது.

தினந்தோறும் ஒரு மணிநேரம் படிப்பிற்காக செலவிடும் பொழுது நமது எண்ணம் மேம்படும். மேலும் நம்முடைய தன்னம்பிக்கை மற்றும் உலகத்தை தெரிந்துகொள்ளலாம். கிராமப்புறங்களில் பொதுமக்களிடையே நூலக பயன் பாட்டை உறுதி செய்யும் வகையில் அனைத்து நூலகங்களும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டு, மக்களுக்குத் தேவையான புத்தகங்கள் நூலகங்களில் வைக்கப்பட உள்ளது.

புத்தக வாசிப்பு என்பது கற்பனை உலகத்தை நிஜமாக்குவ தற்கு நம்மிடையே ஆர்வத்தை தூண்டுவதாகும். எனவே மாணவர்கள் அனைவரும் படிக்கும் பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை

இதன்மூலம் எதிர்காலத்தில் நாம் என்னவாக போகிறோம் என்பதற்கான வழிவகையினை ஏற்படுத்தும். புத்தகம் படிப்பின் மூலம் நம்மிடையே வளரும் .அறிவு செல்வத்தின் மூலம் இச்சமுதாயத்திற்கு பயன்தரக்கூடிய மக்களாக  உருவெடுக்க முடியும்  என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர்  ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கருணாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர்  ரமேஷ், பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top