Close
நவம்பர் 21, 2024 2:19 மணி

புதுக்கோட்டை வாசிக்கிறது… மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்

புதுக்கோட்டை

குன்னாண்டார்கோயில் ஒன்றியம்: கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ சின்னத்துரை முன்னிலையில் நடைபெற்ற புத்தக வாசிப்பு நிகழ்வு

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், அரசு அலுவலகங்களின் அலுவலர்கள் ஆங்காங்கே ஆர்வமுடன்  பங்கேற்றனர்.
குன்னாண்டார்கோயில் ஒன்றியம்:
கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பரிமளம் தலைமை வகித்தார்.

 

சிறப்பு அழைப்பாளராக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை கலந்து கொண்டு மாணவர் களோடு அமர்ந்து புத்தகங்களை வாசித்தார். புத்தகத் திருவிழாவின் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார், வட்டார வளமைய மேற்பார்வை யாளர் அனிதா, தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார துணைத்தலைவர் கே.வடிவேல், வட்டார செயலாளர் தே.ராஜா வட்டார பொருளாளர் ஆ.சவரிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அனைவரையும் முதுகலை ஆசிரியர் கே.ஆர்.ரமேஷ் வரவேற்றார். நிறைவாக உதவி தலைமை ஆசிரியர் தங்கம்  நன்றி கூறினார். மாணவர்களோடு மாணவர்களாக அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் புத்தகம் வாசித்தது மாணவர்களுடைய மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

 அறந்தாங்கியில்.

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வை அறந்தாங்கி மாதிரி மேல்நிலைப் பள்ளியில், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்டின் ஜெயபால் துவங்கி வைத்து பேசினார்.

இந்நிகழ்வில் புத்தகத் திருவிழா மாவட்டஒருங்கிணைப்பாளர், பட்டிமன்ற நடுவர், கவிஞர் ஜீவி  பங்கேற்று, வாசிப்பு  நமக்கு எவ்வாறெல்லாம் பயனளிக்கிறது என்பது பற்றியும், புத்தகத் திருவிழாவுக்கு அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு அதிக அளவில் புத்தகம் வாங்கி படிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக அனைவரையும் தலைமையாசிரியர் சேகர் வரவேற்றார். இதில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் மாவட்டக் கல்வி அலுவலர் தொடக்க நிலை சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை பொறுப்பு முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் , பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா, அறிவியல் இயக்க ஒருங்கிணைப் பாளர் எம்.கணேசன், ஆசிரியர் பயிற்றுனர் சசிகுமார் உள்ளிட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் கொண்டனர்.
நிறைவாக ஆசிரியை கீதா நன்றி கூறினார்.

கறம்பக்குடி ஒன்றியம் தட்டாமனைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை
கறம்பக்குடி ஒன்றியம் தட்டாமனைப்பட்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு

பள்ளி தலைமை ஆசிரியர்  சத்யபாமாதலைமையில் ஆசிரியர்கள் ஸ்டாலின் சரவணன், ராதிகா,மரியசிபிலா, சுஜாதா,வினோதா ஒருங்கிணைப்பில் மாணவ , மாணவிகள் புத்தக வடிவில் அமர்ந்து வாசித்தனர்.வருகிற ஜூலை 28- ஆகஸ்ட் 6 வரை புதுக்கோட்டையில் ஆறாவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு 6 வடிவில் மாணவ , மாணவிகள் அமர்ந்தும் வாசித்தனர்.

அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எழுத்தாளர் நா.முத்துநிலவன், கல்லூரி முதல்வர் ம.அன்புச்செழியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாசகர் பேரவையின் செயலர் பேரா.சா.விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

ஆலங்குடி அருகே கீழாத்தூரில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் சுமார் 50 பேர் தங்களின் பணித் தளத்திலேயே அமர்ந்து நூல்களை வாசித்தனர்.

வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளின் மாணவ, மாணவிகள், நூலக வாசகர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுப் பெண்கள்,  அரசு அலுவலக ஊழியர்கள் என 3 லட்சம் பேர்  புத்தகங்களை வாசித்தனர்.

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி..

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி மாமன்னர் கல்லூரி    மாணவர்கள்  முதல்வர் பேராசிரியர்கள்    புத்தகம் வாசித்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வரும் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.

 குளத்தூர் மகாத்மாதொடக்கப்பள்ளி…

 புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி குளத்தூர் மகாத்மா மழலையர்கள்  மற்றும் தொடக்கப்பள்ளி   மாணவர்கள் அரசு நூலகத்தில் புத்தகம் வாசித்தனர்.

புதக்கோட்டை
குளத்தூர் மகாத்ம பள்ளியில் நடந்த புத்தக வாசிப்பு நிகழ்வு

நிகழ்வில் நூலகர் ,பள்ளியின்    தாளாளர் ரவிச்சந்திரன் ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை வரும் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.  திருவிழாவையொட்டி நடைபெற்ற ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில்  3  லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.
முற்பகல் 11 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,  குளத்தூர் மகாத்மா மழலையர்கள்  மற்றும் தொடக்கபள்ளி   மாணவர்கள் அரசு நூலகத்தில்புத்தகம் வாசித்தனர் நிகழ்வில் நூலகர் ,பள்ளியின்    தாளாளர் ரவிச்சந்திரன் ஆசிரியர்கள்  மாணவ, மாணவிகள்,  வாசகர்கள்,  பங்கேற்றனர்.  

புத்தகக் திருவிழாவையொட்டி நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது’  நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில்  3 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். நிகழ்வில்   மாமன்னர் கல்லூரி      மாணவர்கள்  முதல்வர் பேராசிரியர்கள்    புத்தகம் வாசித்தனர்       மாணவ, மாணவிகள்,  வாசகர்கள்,  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top