Close
நவம்பர் 21, 2024 6:33 மணி

சர்வதேச சிலம்பப்போட்டியில் பதக்கங்களை அள்ளிய அருப்புக்கோட்டை பள்ளி மாணவர்

அருப்புக்கோட்டை

மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்பப்போட்டியில் பதக்கங்களை வென்ற அருப்புக்கோட்டை பள்ளியில் பயிலும் காரியாபட்டி மாணவர் முகுந்தன்

மலேசியாவில் நடைபெற்ற  சர்வதேச சிலம்பம் சாம்பியன் போட்டியில், காரியாபட்டி பள்ளி மாணவன் பங்கேற்று தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
மலேசியா பெஸ்ட் எம்பயர் சிலம்பம் அகாடமி சார்பாக, மலேசியா – இந்தியா சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 1-ஆம் தேதி முதல் 3 -ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்றது. போட்டியில்,  தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை ஜ.எஸ்.எப் சிலம்பம் அகாடமியில் பயிற்சி பெற்ற, காரியாபட்டியை சேர்ந்த பள்ளி மாணவன் முகுந்தன் சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போட்டிகளில் பங்கேற்ற முகுந்தன், சுருள் வாள் வீச்சில் -முதல் பரிசாக தங்க பதக்கமும்,. இரட்டை கம்பு விளையாட்டில், இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கமும், கம்பு சண்டையில் – மூன்றாம் பரிசு வெண்கல பதக்கத்தையும் மாணவன் முகுந்தன் வென்று சாதனை படைத்துள்ளார். மாணவர் முகுந்தனின் தந்தை வெங்கடேசன், காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத் தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

முகுந்தன், அருப்புக்கோட்டை செளடாம்பிகா பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். சாதனை படைத்த மாணவர் முகுந்தனுக்கு, காரியாட்டி பேரூராட்சித் தலைவர் மற்றும் அலுவலர்கள்  மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொது நல அமைப்பு பிரதிநிதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top