எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம அறிவு மையத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் மேலப்பட்டி கிராம அறிவு மையம் மற்றும் குழந்தைகள் நல குழுமம் இணைந்து நடத்திய பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மேலப்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு எண்ணை ஊராட்சி மன்ற தலைவர் கே. நாகராஜ் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் கே.சதாசிவம் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றினார்.
குற்றவியல் வழக்கறிஞர் சி.கிருத்திகா மற்றும் குழந்தைகள் நல குழுமத்தின் உறுப்பினர் பெண்களும் சட்டமும் என்ற தலைப்பில் அவர் குறிப்பாக குழந்தை திருமண தடுப்புச் சட்டம் இளம் சிறார் நீதி குழந்தைகள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 போக்சோ சட்டம் 2012 பெண்கள் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டம் 2005 வரதட்சணை முறை தடுப்புச் சட்டம் 1961 மருத்துவ கர்ப்பத்தை நிறுத்துதல் சட்டம்.
1971 பங்கேற்கும் உரிமைச்சட்டம் மற்றும் பெண்கள் கடமையை மட்டுமே அறிந்திருந்த இக்காலத்தில் அவர்கள் உரிமையையும் அதற்குரிய சட்டங்களையும் சட்டத்தின் மூலம் எவ்வாறு உரிமைகளை பெறுவது என்பதை பற்றி உரையாற்றினார்.
மேலாண்மை குழு தலைவர். கே.சிவசுப்பிரமணியன் மற்றும் குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் ஏ.ஜென்மராக்கினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பெண்கள் சுயதொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் தையல் மற்றும் எம்ராய்டரி முடித்த 30 மகளிருக்கும் கணினி பயிற்சி முடித்த 34 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் 100 பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம வள மைய தொழில்நுட்ப அலுவலர் ஆர்.வினோத்கண்ணா செய்திருந்தார். கிராம வள மைய கள ஒருங்கிணைப்பாளர் விமலா அனைவரையும் வரவேற்றார். கிராம அறிவு மையப் பணியாளர் லெட்சுமி நன்றி கூறினார்.