Close
செப்டம்பர் 20, 2024 3:48 காலை

சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை விளக்கி ஜூலை 29 தஞ்சையில் மாவட்ட மாநாடு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் நடைபெற்ற அனைத்து தொழில்சங்கங்கலின் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை விளக்கி ஜூலை 29 தஞ்சையில் மாவட்ட மாநாடு நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம்  தஞ்சாவூர் தொமுச பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐஎன்டியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என். மோகன்ராஜ் தலைமை வகித்தார். தொமுச மாவட்டச் செயலாளர் கு.சேவியர், ஏஐடியூசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு, மாவட்ட பொருளாளர் பி.என்.பேர்நீதிஆழ்வார்.

மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ராஜா ராமன் மற்றும் தொமுச நிர்வாகிகள் காளிமுத்து, ரமேஷ், முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களுக்கு சேவை செய்யும் மத்திய ,மாநில பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, போராடி பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்பாக சுருக்கப்பட்டது.

விலைவாசி உயர்வை குறைக்க தவறியது, பொருளாதார வளர்ச்சி, சிறு குறு தொழில் பாதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை களில் ஒன்றிய மோடி அரசு நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தவறியது, மதரீதியாக மக்களை பிளவுபடுத்து வதை கண்டித்து ஆகஸ்ட் 9 -ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு கிளர்ச்சி நாளில் சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் பெருந்திரள் அமர்வு போராட்டத்தை விளக்கி ஜூலை 29-ஆம் தேதி தஞ்சாவூரில் மாவட்ட மாநாடு நடத்துவது என்றும், சென்னையில் நடைபெறும் போராட்டத்தை விளக்கி தஞ்சை மாவட்டம் முழுவதும் தெருமுனை கூட்டம்,பிரசாரங்களை நடத்துவது  என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top