Close
நவம்பர் 21, 2024 8:00 மணி

நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சையில் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக்கல்லூரி மாணவர்கள்

நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய கோரிதஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கருப்பு பட்டை  அணிந்து ஆர்ப்பாட்டம்.

மருத்துவம் படிப்பதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் உள்ள நிலையில், மருத்துவம் பயின்று வருகின்ற மாணவர்கள் பயிற்சி மருத்துவராக பணிபுரிய மருத்துவ தேசிய ஆணையம் இளங்கலை மருத்துவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை கட்டாயமாக்கி உள்ளது.

பல்வேறு மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான இயக்கங்கள் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு முதல் நெக்ஸ்ட் தேர்வு என்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது .

இந்தத் தேர்வால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேர்வதுடன், பயிற்சி மருத்துவத்தில் தேர்வு பெறுவதும் கடினமாக உள்ளது. இளங்கலை மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மாணவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குதமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.பி.விக்னேஷ் தலைமை வகித்தார்.

ஒன்றிய அரசு நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சி மாணவர்களை ஒருங்கிணைத்து பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும் என இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

மேலும்,  இளங்கலை மருத்துவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ பாடத்திட்டங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் நெக்ஸ்டை நடைமுறைப்படுத்தக் கூடாது, இத்தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top