Close
நவம்பர் 22, 2024 6:54 காலை

பிஎம் கிஸான் திட்டத்தில் 14 ஆவது தவணை பெற அஞ்சலகத்தில்

புதுக்கோட்டை

அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி

பிரதமர் கிசான் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் 14 -ஆவது தவணை தொகை பெற ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி உதவிட தயாராக இருக்கிறது.

புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எல். முருகேசன்  வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகள், ஜூலை முதல் வாரத்தில் வழங்கப்பட உள்ள 14 -ஆவது தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள் / தபால்காரர் / கிராம அஞ்சல் ஊழியரை அணுகி, ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறையிலிருந்து பெறப்பட்ட தகவலின் படி தமிழ்நாட்டில் 2.17 லட்சம் விவசாயிகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,938 ஆயிரம் விவசாயிகளும் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும்.

தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை மட்டும் பயன்படுத்தி  (விரல் ரேகை மூலம்) மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும்.

இதற்காக மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள் / தபால்காரர் / கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொவங்கி பயன்பெறலாம்.

நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றிற்கு ரூ.6000/- வழங்கும் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி’ என்ற திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக (ரூ.2000/- வீதம்) இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இத்திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து இதுவரை 13 தவணைகள் விடு விக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைவரும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top