Close
செப்டம்பர் 20, 2024 1:22 காலை

ஓய்வூதியர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் உயிர்வாழ் டிஜிட்டல் சான்று

புதுக்கோட்டை

டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

தமிழ்நாடு மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு உயிர்வாழ் (LIFE CERTIFICATE) சான்றிதழ் அஞ்சலர் மூலம் வீடு தேடி கொடுக்கப்படும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:தமிழக அரசு பணிக் கால ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, தங்களது உயிர்வாழ் சான்றிதழை, டிஜிட்டல் முறையில் அஞ்சலர்கள் மூலம் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.

இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.70 -ஐ தங்கள் பகுதி தபால்காரரிடம்  செலுத்த வேண்டும். அத்துடன் ஆதார், கைப்பேசி எண், ஓய்வூதியர் எண் மற்றும் ஓய்வூதிய வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top