Close
நவம்பர் 21, 2024 11:25 மணி

புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர், சுகாதாரப்பணிகள்: ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர்த்திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை நகராட்சியில்குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில், குடிநீர் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா சனிக்கிழமை (15.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை வைரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி அருகில், பெரியார்நகர் நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி யினையும், பூங்காநகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியி னையும் மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முறையாக பராமரிக்கப் படுகின்றனவா என்பது குறித்தும், குடிநீர் சுத்திகரிக்கும் பணிகள் உரிய நேரத்தில் செய்யப்படுகின்றனவா என்பது குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும் சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஹோட்டல் அருகில், நகராட்சி குப்பை சேகரிக்கும் இடத்தில், மாவட்ட ஆட்சியர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும் தமிழ்நாடு ஹோட்டல் அருகில், குப்பைகள் குவிந்திருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அவற்றை அகற்றிவிட்டு மரக்கன்றுகள் நட்டு, பூங்கா அமைத்திட நகராட்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உதவிப் பொறியாளர் (நகராட்சி)  கலியக்குமார், சுகாதார ஆய்வாளர்கள்  மகாமுனி, பாபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top