Close
நவம்பர் 21, 2024 8:39 மணி

வங்கிப் பணிகளில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையிஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத்தினர்

வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்: ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடமையாக் கப்பட்ட வங்கிப் பணிகளில் எழுத்தர் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க எழுத பேச வேண்டும் என்பது கட்டாயமாகவும் இருந்தது இதன் காரணமாக தமிழ்நாட்டில் அரசு வங்கிகளில் கிளர்க் பணிகளில் தமிழ்நாட்டவர்களுக்கே இதுவரை வாய்ப்புகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில் வங்கி தேர்வு நடக்கும் வங்கிப் பணியாளர் தேர்வு கழகம் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடும் விளம்பரத்தில் மாநில மொழிகளில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் இல்லை அது ஒரு முன்னுரிமை மட்டுமே என்று விளம்பரப்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளவரும் தமிழ்நாட்டில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று வங்கிப் பணிகளில் சேரும் வாய்ப்பு அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது 2022- 2023 ஆம் ஆண்டுக்கான எழுத்தர் பதவி நியமனங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆறு அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் 288 எழுத்தர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இந்த ஆண்டு தமிழ் மொழி தெரியாத வெளிமாநிலத் தவர்கள் பணியில் சேர உள்ளனர் என்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  தொடர்ந்து 2017 முதல் இதே போன்று வெளி மாநிலதர் எழுத்தர் பதவிகளுக்கு விண்ணப்பித்து தமிழ் தெரியாமல் வேலை பார்க்கின்றனர்.

சென்ற ஆண்டு ஏறத்தாழ 400 வெளிமாநிலத்தவர் இவ்வாறு வங்கியில் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகின்றது. ஒன்றிய அரசின் வங்கிப் பணியில் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப் படுவதை கண்டித்தும் மாநில மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top