புதுக்கோட்டை மாவட்டம், நடப்போம் நலம்பெறுவோம் (Health Walk) திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை நகராட்சி, திலகர் திடலிலிருந்து, மாலையீடு, விளாக்குடி பேருந்து நிறுத்தம் வரையில் 8 கிமீ தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை தேர்வு செய்வதற்கான ஆய்வு நடைபெற்றது.
சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று (19.07.2023) ஆய்வு மேற்கொண்டார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகராட்சி, திலகர் திடலிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள நடப்போம் நலம்பெறுவோம் (Health Walk) திட்டத்தின் கீழ், மாலையீடு, விளாக்குடி பேருந்து நிறுத்தம் வரையிலான 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதி படுத்துவதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.
தமிழக மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, வரும்முன் காப்பதே சால சிறந்தது என்ற அடிப்படையில் நடைப்பயிற்சியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தினை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உடற்பயிற்சி செய்வது நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய் தாக்கத்தை குறைக்கின்றது. மேலும் நடைப்பயிற்சி மூலம் மக்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும், நாள்பட்ட உடல் பிரச்னைகள் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீட்டர் தூரம் கொண்ட நடைப்பாதை கண்டறிந்து ஆரோக்கிய நடைப் பயிற்சி மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி இன்றையதினம் (புதன்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்போம் நலம்பெறுவோம் (Health Walk) திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை நகராட்சி, திலகர் திடலிலிருந்து, மாலையீடு, விளாக்குடி பேருந்து நிறுத்தம் வரையிலான 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மறுபடியும் தொடங்கிய இடத்திற்கே வருகை தந்து 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதி படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த ஆய்வில், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு எவ்வித சிரமமுமின்றி சாலையின் இருபுறமும் மரங்கள் இருக்கும் வகையிலும், ஆசுவாசப்படுத்திக்கொள்ள உரிய ஏற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்தும், சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் இல்லாத வகையில் உள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண் டவர்களுக்கு மருத்துவத்துறையின் சார்பில் 6 இடங்களில் குடிநீர் வழங்கியும் மற்றும் 2 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேள், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜாள், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை தி.சி.செல்வவிநாயகம் , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் .
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசு.கவிதைப்பித்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் த.சந்திரசேகர், நகர்மன்ற துணைத்த லைவர் லியாகத்அலி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பார்த்தசாரதி.
துணை இயக்குநர்கள் மரு.ராம்கணேஷ் (புதுக்கோட்டை), மரு.நமச்சிவாயம் (அறந்தாங்கி), புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) சிவக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.