Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

ஆர். கே.நகரில் ரூ. 12.55 லட்சத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் திறப்பு

சென்னை

ஆர் கே நகர் தொகுதியில் ரூ.13.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை புதன்கிழமை திறந்து வைத்த சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே.எபினேசர். உடன் மண்டல குழு தலைவர் நேதாஜி யு. கணேசன், மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் ஆர். கே.நகரில் ரூ. 12.55 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த குழந்தைகள்  வளர்ச்சி மையத்தை ஜே.ஜே. எபினேசர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
சென்னை திருவொற்றியூர் ஆர் கே நகர் தொகுதியில் ரூ. 12.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ஜே. ஜே.எபினேசர் புதன்கிழமை திறந்து வைத்தார்.
ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ 12.55 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் வகையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. குளிர்சாதன வசதிகளிடம் கூடிய அறைகள் அமைக் கப்பட்டுள்ளன.
குழந்தைகள் மகிழ்வுடன் இருக்கும் வகையில் விளையாட்டுப் பொருள்கள், ஓவியங்கள், கல்வி கற்று தருவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜே .எபினேசர் புதன்கிழமை திறந்து வைத்தார்.
மேலும் புதுவண்ணாரப்பேட்டை பெரியார் பூங்காவில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.10 லட்சம் செலவில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளை எபினேசர் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நேதாஜி யு கணேசன் மாமன்ற உறுப்பினர் தேவி கதிரேசன், திமுக நிர்வாகிகள் லட்சுமணன்,  வெற்றிவீரன் அனிபா, கதிரேசன், வழக்குரைஞர் ரவிச்சந்திரன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top