Close
ஏப்ரல் 4, 2025 11:34 காலை

ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

புதுக்கோட்டை

ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனம் சார்பில் கீரனூரில் நடந்த விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனுரில் ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனம்- ஏ. நடராஜன், ஸ்ரீ பிரகதம்பாள் ஏஜென்சிஸ் சார்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மண்டல மேலாளர் பி. குமரன் தலைமை வகித்தார். விற்பனை அலுவலர் ஜி. மயிலவாகனன் வரவேற்றார்.
பூச்சி மேலாண்மை- பயிர் பாதுகாப்பு குறித்து இணை பேராசிரியர்  எஸ். சேகர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
இதில் உதவி பொதுமேலாளர் என். ராஜேந்திரன் கலந்துகொண்டு ஸ்பிக் நிறுவனத்தில் உள்ள இயற்கை இடுபொருள்கள் மற்றும் உர மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டிற்கான அதிர்ஷ்ட குழுக்கள் திட்டம் அறிமுக படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கேள்வி – பதில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் முடிவில் ஏ. சக்திவேல் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top