Close
செப்டம்பர் 19, 2024 7:22 மணி

புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டையில் நடைபெற்றது.

 புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டையில் நடைபெற்றது.

தற்பொழுது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களிலிருந்து பொதுமக்களை விழிப்புடன் விற்க வேண்டும் என்பதற்காக சைபர் கிரைம் விழிப்புணர்வு பேரணி புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் நடைபெற்றது.

இந்த பேரணியை சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப் பாளர் தேன் தமிழ் வளவன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் உங்கள் ஏடிஎம் கார்டு பின் ஆதார் கார்டு எண்ணை பாதுகாப்பாக வைக்கவும் எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உங்கள் ரகசிய குறியீடு என்னை டெபிட் கார்ட் கிரெடிட் கார்டு மீது குறித்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

இணையதளத்திலோ சமூக வலைதளத்திலோ அலைபேசி இலோ உங்கள் சுய விவரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டாம்,

முகம் தெரியாத நபர்களை சமூக வலைதளத்தில் நண்பர்களாக்கி கொள்ள வேண்டாம்.இணைய தளத்தில் சலுகை விலையில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் அவை போலியானவையாக கூட இருக்கலாம்,

மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தருவதாக வரும் அழைப்புகள் மற்றும் எஸ் எம் எஸ் களை நம்ப வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பேரணியானது புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு சத்தியமூர்த்தி சாலை, புதிய பேருந்து நிலையம், மேல ராஜவீதி, பிருந்தாவனம், அண்ணா சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றடைந்தது.

இந்தப் பேரணியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top