அத்திகடவு -அவினாசி திட்ட பணிகள் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் காரணமாக இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் திட்டம் தாமதமாக நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.
கோபி செட்டிபாளையம் அடுத்துள்ள கோட்டுபுள்ளம் பாளையம் ஊராட்சியில் புதிய நூலகம் அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ தொடக்கி வைத்தார்.
ராயர்பாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் எம்மாம்பூண்டி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் என சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆன நலத்திட்ட பணிகளை தொடக்கி வைத்தார்.
பின்னர் நம்பியூர் வரபாளையம் பகுதியில் அமைந்துள்ள அத்திகடவு அவினாசி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சியில் அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் நலன் கருதி விரைந்து இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி அனைத்து நீரேற்று நிலையங் களுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அரசு தனி கவனம் செலுத்தி வேண்டும். இதற்கென தனி அலுவலரை நியமித்து, இன்னும் ஒரு மாத காலத்திற்குள் தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவை நிறைவேற்றிய அரசாக அதிமுக உள்ளது. அதே போல அத்த்திகடவு அவினாசி திட்டத்தில் விடுபட்டுள்ள குளங்கள் ஏரிகளை இணைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 19 -ஆம் தேதி முதல் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்துள்ளது இது குறித்து முழு விவரங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சூழல் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் செங்கோட்டையன்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்திய பாமா, யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் அனுராதா, எம்ஜிஆர் மன்றம் அருள் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.