புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மழைநீரை சேகரிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
மத்தியஅரசின் நீர்வள அமைச்சகம் மற்றும் நேரு யுவ கேந்திரா சங்கதன் ஆகியவை இணைந்து மழை நீரை சேகரித்தலின் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்திவருகிறது.
இதன் ஒரு பகுதியாக மழை நீரை சேகரித்தல் மற்றும் சிக்கனமாக பயன்படுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நாட்டுநலப்பணித் திட்டம், பசுமைப்படை போன்றஅமைப்புகளைச் சார்ந்த சுமார் 200 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) எஸ்.கணேசன் தலைமை வகித்தார். பொன்னமராவதி காவல் ஆய்வாளர்திரு. எம்.ரமேஷ், பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் ஆகியோர் மழை நீரை சேகரித்தலின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர்திரு. நாராயணசாமிராஜூ வாழ்த்துரை வழங்கினார்.
நிறைவாக நேருயுவ கேந்திராவின் தேசிய இளையோர் தொண்டர் கருப்பையா அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை பிரபஞ்சம் வளர்ச்சி அறக்கட்டளை மற்றும் பொன்னமராவதி பிரபஞ்சம் இளையோர் நற்பணி மன்றத்தினர் ஆகியோர் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.