Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழக முதல்வருக்கு நமது மக்கள் கட்சி கோரிக்கை

தமிழ்நாடு

நமது மக்கள் கட்சிக் கொடி

ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென  தமிழக முதல்வருக்கு நமது மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நமது மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மு. சரவண தேவா வெளியிட்ட அறிக்கை :

தமிழ்நாடு
நமது மக்கள் கட்சி பொதுச்செயலர் மு. சரவணதேவா

இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி மக்கள் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என போராடிவருகின்றன.

இந்தச் சூழலில் பல மாநிலங்களில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த அந்தந்த மாநில அரசு முடிவு செய்து அதற்கு நிதியை ஒதுக்கி தரவுகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்து வருகின்றன.

அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களின் உண்மையான நேர்மையான ஜாதிவாரியான கணக்கெடுப்பு களை நடத்தி அந்தந்த சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பினை வெளியிட்டு உண்மையான ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழகத்தில் உள்ள 255 சமூக ஓபிசி மக்கள் சார்பில் அனைத்து சமூகத்தின் தலைவர்கள் தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இச்சூழலில் 255 சமூக மக்களின் கூட்டமைப்பான பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர்களை சந்திக்காது காலம் தாழ்த்தும் போக்கு ஒட்டு மொத்த மக்களின் போராட்டத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரு சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் விளைவாக மத்திய மாவட்டத்திலும் தென் மாவட்டங்களிலும் முந்தைய அரசு தோல்வி அடைந்ததற்கு இது ஒரு  முக்கியக் காரணமாகும்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு செவி சாய்த்து நம் மக்களின் கல்வி வேலை வாய்ப்பு முன்னுரிமை பெற நடவடிக்கை மேற்கொள்வது ஒரு அரசின் கடமை.  இட ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு மாணவனின் உயிர்நாடியாக உள்ளது.

இந்நிலையில், இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் மெத்தன போக்கு காட்டுவது ஏற்புடையதல்ல.  முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து  வெற்றி பெறச்செய்ததில்  முக்கிய பங்கு தென் மாவட்ட ஓபிசி மக்களுக்கு உண்டு.

இட ஒதுக்கீட்டுக்காக போராடும் தலைவர்களின் தளராத போராட்டம் உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை கண்ட கூட்டமைப்பின் தலைவர்களை சந்திக்காமல் புறக்கணிப்பது எதிர்வரும் தேர்தல் காலகட்டத்தில் ஒட்டுமொத்த சமூக மக்களிடம் விரக்தியை ஏற்படுத்தும்  என்பதை உணர வேண்டும்.

தற்போது பாராளுமன்றத் தேர்தலில் மனதில் கொண்டு பாமகவினர் வன்னியருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடை மீண்டும் பெறுவதற்கு தேர்தல் வாக்குறுதிகளாகப் பெறுவதற்கு தனது கூட்டணி கட்சிகளிடம் கோரிக்கை வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில், தங்கள் தலைமையிலான அரசு சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தமிழகத்தில் பெருவாரியாக உள்ள ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்களான முத்தரையர்களின் கல்வி வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதைப்போல பாதிக்கப்பட்ட ஓபிசி மக்களுக்கு  சம உரிமை கிடைக்க சமூகநீதி காக்க ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என நமது மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சரவண தேவா அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top