Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

அரசு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி பெற  அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆண்டு பொதுத்தேர்வு (2022-2023) பகுப்பாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்  (26.07.2023) நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற  அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆண்டு பொதுத்தேர்வு (2022-2023) பகுப்பாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்  (26.07.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் 15 மாணவ, மாணவிக ளுக்கு தலா ரூ.10,000 வீதமும், 12 ஆம் வகுப்பு பயிலும் 15 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15,000 வீதமும் மதிப்புடைய காசோலைகளையும் மற்றும் காமராஜர் விருதிற்கான சான்றிதழ்களையும் ஆட்சியர்  வழங்கினார்.

இக்கூட்டத்தில், கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி குறித்து வட்டார வாரியாகவும், பள்ளி வாரியாகவும், பாட வாரியாகவும் மாவட்ட ஆட்சியர்  ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பள்ளிகளுக்கு அதிக நாட்கள் வருகை தராத மாணவ, மாணவிகளை பள்ளிக்கு தொடர்ந்து வருகை புரிவதற்கான வருவாய்த்துறை, ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

படிப்பில் கவனம் குறைவான மாணவர்கள் மீது சிறப்பு கவனம் மேற்கொண்டு, சிறப்பு வகுப்புகள் மூலமாக அவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்துவது , பாட வாரியாக கடந்த ஆண்டில் அதிகம் தோல்வியடைந்த பாடப்பிரிவுகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள்.

பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, நடப்பு கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தமிழக அளவில் புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பிடம் பெற அனைத்து தலைமை ஆசிரியர்களும் பொறுப்புடன் பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கருணாகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஆர்.முருகேசன் (அறந்தாங்கி), ஒய்.ஜெயராஜ் (தனியார் பள்ளிகள்), முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன்,ராஜு,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், உதவித் திட்ட அலுவலர்கள் சுதந்திரன், தங்கமணி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளர்கள் குரு மாரிமுத்து, வேலுச்சாமி, இளையராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top