Close
நவம்பர் 22, 2024 5:22 காலை

6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா லட்சக்கணக்கான புத்தகங்களுடன் வெள்ளிக்கிழமை தொடக்கம்

புதுக்கோட்டை

ஜூலை 28 ல் தொடங்கும் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா அரங்கை பார்வையிட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா.

புதுக்கோட்டை6-ஆவது புத்தகத் திருவிழா லட்சக்கணக்கான புத்தகங்களுடன் புதுக்கோட்டை நகர்மன்றத்தில்  வெள்ளிக்கிழமை  (ஜூலை.28) கோலாகலமாக தொடங்குகிறது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழா ஜூலை.28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் மூலம் 120 அரங்குகளில் லடச்சக்கணக்கான புத்தகங்கள் வாகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில்

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அனைத்து அரங்குகளிலும் வாசகர்களுக்கு சிறப்புக் கழிவுகளில் புத்தகங்கள் விற்கப்பட உள்ளன. பள்ளி மாணவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மாணவர்களுக்கு குறிப்பிட்ட பதிப்பகங்களில் கூடுதல் கழிவுகளும் வழங்கப்பட உள்ளன.

புதுக்கோட்டை

தொடக்கவிழா

வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியரும்,புத்தகத்திருவிழாக் குழுத் தலைவருமான ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே முன்னிலை வகிக்கிறார்.  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

புதுக்கோட்டை
முதல்நாள் நிகழ்வு

மாலையில் நடைபெறும் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளி;ட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

புதுக்கோட்டை
அரங்குகள் அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் மெர்சி ரம்யா

அரங்குகள் அமைக்கும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

புத்தகத் திருவிழா இன்று தொடங்கவுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெரிசி ரம்யா வியாழக்கிழமை அரங்குகள் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் வட்டாட்சியர் எஸ்.விஜயலெட்சுமி மற்றும் புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top