Close
ஏப்ரல் 4, 2025 11:32 காலை

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு நாள்: வெங்கடேஸ்வரா பள்ளி மாணவர்கள் அஞ்சலி

புதுக்கோட்டை

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி வாசிப்போர் மன்றம் சார்பாக டாக்டர் ஏபிஜே. அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாசிப்போர் மன்றம் சார்பாக மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

27..07.2023 அன்று பள்ளியின் வாசிப்போர் மன்றம் சார்பாக அவரின் திருவுருவப்படத்திற்கு மாணவர்கள்; செலுத்தினர். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கலந்துகொண்டு அக்னி நாயகர் அப்துல் கலாமின் நினைவுகளை மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார்.

இதுபோல தேசத் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் நடத்தப்படும் நிகழ்வுகளால் மாணவர்களுக்கு தலைவர்களின் தியாகங்கள், வாழ்நாள் அனுபவங்களை அறிந்துகொண்டு வாழ்வில் முன்னேற வாய்ப்பாக அமைகின் றது என்று குறிப்பிட்டார். ஏராளமான மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top