Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

மகளிர் உரிமைத்திட்டப் பதிவு முகாம் : அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு

புதுக்கோட்டை

புதுகை நகராட்சியில் நடைபெற்ற மகளிர் உரிமைத்திட்ட முகாமை ஆய்வு செய்த அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை   அமைச்சர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை,   சட்டம், நீதிமன் றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  (28.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதலமைச்சர்  27.03.2023 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்கும் வகையில், மாதம் ரூ.1,000 வழங்கிடும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” ஏறத்தாழ ஒருகோடி குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனடிப்படையில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000ஃ- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாம் முதல்கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சி காமராஜபுரம் தொடக்கப் பள்ளியிலும், இராணியார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், உசிலங்குளம் அண்ணா நினைவு தொடக்கப்பள்ளியிலும் ஆகிய இடங்களில் இன்றையதினம் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முகாம்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கான குறிப்பிட்ட நாட்களில் வருகைபுரிந்து, விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் .விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top