Close
நவம்பர் 22, 2024 6:57 காலை

விண்வெளி ஆய்வு என்பது ஏழை நாடுகளுக்கு ஒரு பெரிய செலவு அல்ல

புதுக்கோட்டை

புத்தகத்திருவிழாவில் பேசுகிறார், தில்லி விஞ்ஞான் பவன் முதுநிலை விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன்

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில்  தில்லி விஞ்ஞான் பவன்  மூத்த விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று பேசியதாவது: விண்வெளி ஆய்வு என்பது ஏழை நாடுகளுக்கு ஒரு பெரிய செலவு அல்ல .

விண்வெளி குறித்த ஆய்வுகள் எல்லாம் நம்மைப் போன்ற ஏழை நாடுகளுக்கு  அதிக சுமையானது என்ற கேள்வியை எழுப்புகின்றனர். உண்மையில் அது பெரிய செலவு கிடையாது. காரணம், ஓராண்டு தீபாவளிப் பண்டிகைக்கு நாம் வெடிக்கும் மொத்த வெடிகளுக்கான செலவு ரூ. 5 ஆயிரம் கோடி. இந்தத் தொகையில் இருந்து 8 சந்திராயன் விண்கலன்களை அனுப்பிவிடலாம்.

தீபாவளிக்கு வெடிக்க அல்லது சிகரெட் மற்றும் பீடிகளுக்கு ஆகும் செலவு ரூ.1.2 லட்சம் கோடி. விண்வெளி ஆய்வு செலவை விட அதிகம். நிலவில் கிடைக்கும் கனிம வளங்கள் மிகப்பெரிய முதலீடு. அங்கிருந்து ஒரு டன் ஐசோடோப்பு ஹீலியம்-3  எடுத்து வந்தால் இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

சந்திரயான் 3 இல்  கடந்த தோல்வி அனுபவங்களைக் கொண்டு பல்வேறு  மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விண்கலம் தரையிறங்கிய 3 நிமிடங்களுக்குள் பள்ளங்கள் மற்றும் முகடுகளை படம்பிடித்து, செயற்கை நுண்ணறிவு மூலம் முடிவுகளை எடுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.

தரையில் உள்ள ஓட்டைகளை படம் எடுக்கும் தொழில்நுட்பம், திடீரென விழுந்து சேதம் ஏற்படாமல் இருக்க மெதுவாக இறங்குவது, விண்கலத்தின் கால்கள் வினாடிக்கு 2 மீட்டர் வேகத்தில் இறங்கும் போது சேதமடையாமல் இருக்கும் தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக விண்வெளி ஆய்வு என்பது ஏழை நாடுகளுக்கு ஒரு பயனுள்ள முதலீடு என்றும், சந்திரயான் 3 முந்தைய பயணங்களை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது

விண்வெளி ஆய்வு பெரும்பாலும் செல்வந்த நாடுகளுக்கு ஒரு ஆடம்பரமாக பார்க்கப்படுகிறது, ஆனால்  அது ஏழை நாடுகளுக்கும் ஒரு மதிப்புமிக்க முதலீடாக இருக்க முடியும்.
நிலவில் கிடைக்கும் கனிம வளங்கள் வளரும் நாடுகளுக்கு செல்வத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கலாம், மேலும் இந்த வளங்கள் அனைத்து மனிதகுலத்தின் நலனுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய விண்வெளி ஆய்வு உதவும்.
சந்திரயான் 3 முந்தைய பயணங்களை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம், மேலும் விண்வெளி ஆய்வுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பது தெளிவாகிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார் வெங்கடேஸ்வரன்.

நிகழ்வுக்கு பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் தலைமை வகித்தார்.

இதில், சிறப்பு விருந்தினர்களாக நீதித்துறை பொது மேலாளர் செந்தில் நாயகி, ஆர். மாரிமுத்து, வி.  முருகேசன்,முனைவர் சாமி. சத்தியமூர்த்தி,. அ.லெ. சொக்கலிங்கம், க. நைனா முகமது , நகர்மன்ற உறுப்பினர்  சா.மூர்த்தி (கார்த்திக் மெஸ்) விஞ்ஞான பிரச்சார் அறிவியல் பலகை  ஒருங்கிணைப்பாளர்,  பா. ஸ்ரீகுமார், எம்.எஸ். ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புத்தகத்திருவிழா நிகழ்வுகளை    மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன்,அ. மணவாளன், வீரமுத்து முனைவர் ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன்,  மு.முத்துக்குமார், த.விமலா,க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,

கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன்,கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன், கிருஷ்ண வரதராஜன், கவிஞர்  மு.கீதா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top