புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-ஆவது புத்தகத் திருவிழா ஜூலை.28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதிவரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டையில் 6 -ஆவது புத்தகத்திருவிழாவின் ஆறாம் நாள் நிகழ்வுக்கு ஸ்ரீ வைத்தீஸ்வரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
இதில், கதைகளின் கதை என்ற தலைப்பில் எழுத்தாளர் பவாசெல்லத்துரை உரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர்களாக இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலர் ஹெ.மெ.குழந்தைசாமி, புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் முருகேசன், அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலர் பி. ஜஸ்டின் ஜெயபால்,
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவர் சலீம், அபெகா பண்பாட்டு இயக்கம் மருத்துவர் நா. ஜெயராமன், புதுகை ஸ்கேன் சென்டர் டாக்டர் முத்துக்கருப்பன், , கலைஞர் தமிழ்ச்சங்கம் த.சந்திரசேகரன், ஆக்ஸ்போர்டு கேட்டரிங் கல்லூரி சுரேஷ் , அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக். மே.நி.பள்ளி. பி. ஷேக் சுல்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவர் ௧.சதாசிவம் வரவேற்றார். அறிவியல் இயக்க மாவட்ட இணைச்செயலர் கு. துரையரசன் நன்றி கூறினார்.
புத்தகத் திருவிழாக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், த.விமலா, க.சதாசிவம், ஈ.பவனம்மாள்,கவிஞர் ஜீவி,கவிஞர் ராசி. பன்னீர்செல்வன், கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன்,கிருஷ்ண வரதராஜன், கவிஞர் மு.கீதா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் விழாவை ஒருங்கிணைத்தனர்.