Close
நவம்பர் 21, 2024 6:29 மணி

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த விழியிழந்தோர் பள்ளி மாணவர்கள்

புதுக்கோட்டை

சிறைக்கைதிகளுக்கான அரங்கில் புத்தகங்கள் வழங்கிய விழியிழந்தோர் அரசு பள்ளி மாணவர்கள்

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த விழியிழந் தோருக்கான அரசுப்பள்ளி  மாணவர்கள்.

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவின் 7 ஆவது நாள் நிகழ்வில்  சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களைப் பரிசளித்த பார்வையை இழந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதுக்கோட்டையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து பார்வைத்திறன் குறையுடைய 20 மாணவர்களை விழாக்குழுவினர் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்தனர். அவர்களுடன் தலைமை ஆசிரியர் வடிவேலன் மற்றும் பணியாளர்கள் வந்திருந்தனர்.

புத்தகத் திருவிழாவிற்கு வந்த அவர்களை இதரப் பள்ளிகளில் இருந்து வருகை தந்த மாணவ, மாணவிகள் இருபுறங்களிலும் நின்று கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, அ.மணவாளன், கவிஞர் ஜீவி, எம்.வீரமுத்து, மு.முத்துக்குமார், ஸ்டாலின் சரவணன், பவுனம்மாள், கீதா உள்ளிட்டோர் அவர்களை உற்சாகத்துடன்  வரவேற்று அழைத்து வந்தனர்.

புதுக்கோட்டை
புத்தகத்திருவிழாவுக்கு வந்த விழியிழந்தோர் அரசு பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்த விழாக்குழுவினர்

சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கினர்:
புத்தக அரங்கத்திற்குள் சென்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் புத்தகங்களைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர். மேலும், சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் அரங்கிற்கு வந்த அவர்கள் பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை வாங்கி பரிசளித்தனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் வரும்போது எங்களை  பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கைதட்டி வரவேற்பளித்தது மிகுந்த உற்சாகமடைந்தோம். இங்குள்ள புத்தகங்களை எங்களால் வாசிக்க முடியாது.

எங்களால் பிரெய்லி வடிவிலான எழுத்துகளை மட்டுமே வாசிக்க முடியும். ஆகவே, நாங்கள் சிறைக் கைதிகளுக்கு புத்தகங்களை வாங்கி அனுப்பி உள்ளோம். இந்தப் புத்தகங்களை படித்து அவர்கள்  நேர்மையான பண்புகளை வளர்த்து  இந்த சமுதாயத்தில் வாழவேண்டும் என்பதற்காக இதை நாங்கள்  செய்கிறோம் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top