Close
நவம்பர் 21, 2024 5:34 மணி

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள்: அமைச்சர் மெய்யநாதன் தொடக்கம்

புதுக்கோட்டை

திருவரங்குளம் அருகே பாலையூரில் புதிய பணியை தொடக்கி வைத்த அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன். உடன் ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டம்,திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சாலைகள் அமைக்கும் பணிகளையும் மற்றும் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகளையும், ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில்  நடந்த நிகழ்வில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்   (04.08.2023)  பூமி பூஜையுடன் தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:

கிராமப்புறங்களின் வளர்ச்சியில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்ச்சித் திட்டப் பணிகளை முதலமைச்சர்  செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி பொதுமக்களிடமிருந்து சாலைகள் அமைப்பது தொடர்பான கோரிக்கைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  முதலமைச் சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பல்வேறு சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கி வைக்கப் பட்டுள்ளது.

அதன்படி,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மேலாத்தூர் ஊராட்சியில் மேலாத்தூர் முதல் சிக்கப்பட்டி செல்லும் 1 கி.மீட்டர் நீளமுடைய சாலை ரூ.24.53 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணியினையும், கல்லாலங் குடி ஊராட்சியில் முசிறி – சேதுபவாசத்திரம் சாலை முதல் 587 மீட்டர் நீளமுடைய நாயக்கர் சாலை ரூ.18.97 லட்சம் மதிப்பீட் டில் சீரமைக்கும் பணியினையும்,

கரும்பிரான்கோட்டை ஊராட்சியில் பல்லத்திவிடுதி – கரும்பிரான்கோட்டை 584 மீட்டர் நீளமுடைய இணைப்புச் சாலை ரூ.19.71 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியி னையும் மற்றும் மேலகரும்பிரான்கோட்டை பிள்ளையார் கோவில் 543 மீட்டர் நீளமுடைய ஊரணி சாலை ரூ.16.12 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணியினையும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாத்தம்பட்டி ஊராட்சியில் ஆலங்குடி – மறமடக்கி சாலை முதல் தெற்கு பாத்தம்பட்டி 1.25 கி.மீட்டர் நீளமுடைய சாலை ரூ.34.57 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினையும், குப்பகுடி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனி முதல் பாத்தம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகம் வரை செல்லும் 2.12 கி.மீட்டர் நீளமுடைய சாலை ரூ.43.88 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணியினையும்,

சேந்தாகுடியில் ஊராட்சியில், கீழையூர் புதுகாடு முதல் பெரமர் கோவில் வரை செல்லும் சாலை ரூ.27.41 லட்சம் மதிப்பீட்டிலும், பாலையூர் ஊராட்சியில் களிங்கைப்பட்டி சாலை ரூ.28.53 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் பாலன்நகர் ஆதிதிராவிடர் காலனி சாலை ரூ.7.9 லட்சம் மதிப்பீட்டிலும்,

களங்குடி ஊராட்சியில் 950 மீட்டர் நீளமுடைய  சாலை ரூ.22.7 லட்சம் மதிப்பீட்டிலும், எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சியில் ஆலங்குடி – அரிமளம் சாலையிலிருந்து ஒத்தக்குடிப்பட்டி செல்லும் 990 மீட்டர் நீளமுடைய சாலை ரூ.36.17 லட்சம் மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சாலைப்பணிகள் அனைத்தையும் உயர்ந்த தரத்துடன் முடித்து பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் .

முன்னதாக,  குப்பகுடி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பீட்டில் ஆயிப்பட்டி பயணியர் நிழற்குடை பணியினை அமைச்சர் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் .வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top