உயர்நீதிமன்றத்தில் தமிழ் குறித்து புதுக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம்
இன்று 5-08-2023 அன்று உயர்நீதிமன்ற த்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோளுக்கிணங்க
அரசியல் சாசன சட்டத்தின் கூறு 348(2) ம் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ம் வழங்கியுள்ள உரிமையின் கீழ் தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று வரை சட்டப் புறம்பாக நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளதைக் கண்டித்தும், உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்தி எதிர்வரும் தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளான 13.10.2023 வெள்ளிகிழமை முதல் சென்னையில் நடக்கவுள்ள காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு புதுக்கோட்டையில் பரப்புரை மேற்கொள்வது பங்கேற்பது ஆதரவளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது
எதிர்வரும் 12-08-2023 (சனிக்கிழமை) அன்று மாலை சின்னப்பா பூங்கா அருகில் பரப்புரை தொடங்குவது, போராட்டத்தில் திரளாக பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு புலவர் துரை மதிவாணன் தலைமை வகித்தார்.போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கு. ஞா. பகத்சிங் விளக்கவுரை ஆற்றினார்
இதில், கே. எம் சரீப் தலைவர் த. ம. ஜ. க, சீ. அ. மணிகண்டன் செயலாளர், தமிழர் கழகம், இப்றாஹீம் பாபு டவுன் பைத்துல் மால் கமிட்டி, மு. சரவணதேவா செயலாளர் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு, கா. அமுதன் தமிழர் பேரமைப்பு, கே. கே. கார்த்திகேயன் தமிழர் முன்னணி கழகம்,வீரக் குமார் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, எம் சி கே சின்னத்தம்பி பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.