Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

ஆப்த மித்ரா திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட பேரிடர் கால நண்பர்களுக்கு பாராட்டுச்சான்று வழங்கல்

புதுக்கோட்டை

ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ஆப்த மித்ரா ( AAPDA MITRA ) திட்டத்தின்கீழ், சிறப்பாக செயல்பட்ட 100 பேரிடர்கால நண்பர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், புதுக்கோட்டை தனியார் ஹோட்டலில், ஆப்த மித்ரா ( AAPDA MITRA ) திட்டத்தின்கீழ், சிறப்பாக செயல்பட்ட 100 பேரிடர்கால நண்பர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா,  (04.08.2023) பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் பயிற்சி பெற்ற 300 பேரிடர் கால நண்பர்களிலிருந்து சிறப்பாக செயல்பட்ட 100 நபர்களைத் தேர்வு செய்து, திருமயம் தாலுகா, மிரட்டுநிலை, Pளுஏ பல்தொழில் நுட்பக் கல்லூரியில் (PSV Polytechnic College) இரண்டாம் கட்டமாக 24.07.2023 முதல் 04.08.2023 வரை 12 நாட்கள் பேரிடர் மேலாண்மைப் புத்துணர்வுப் பயிற்சி வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேற்காணும் 100 பேரிடர்கால நண்பர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

புயல், மழை, வெள்ளம், பூகம்பம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மனிதனுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். மிக முக்கியம் வாய்ந்த இப்பணியினை அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும் பேரிடர் காலங்களில் மக்களின் துயர் துடைத்து வருகின்றனர்.

இத்தன்னார்வலர்களுக்கு மேலும் பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்களின் திறமையை பேரிடர் காலங்களில் முறையாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் பயிற்சி பெற்ற 300 பேரிடர் கால நண்பர்களிலிருந்து சிறப்பாக செயல்பட்ட 100 நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு பேரிடர் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இதன்மூலம் மனிதர்களின் விலைமதிப்புமிக்க உயிர்காக்கும் சேவையினை செய்வதற்கு வாய்ப்பு உருவாகுவதுடன், பொதுமக்களிடம் பேரிடர் தொடர்பாகவும், பேரிடர்களி லிருந்து மீள்வது தொடர்பாகவும் தேவையான விழிப்புணர் வுகளை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் மெர்சி ரம்யா, தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர்  முருகேசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர்  பானுபிரியா, லெப்டினன்ட்  ஈசன், வட்டாட்சியர்கள்  சூரியபிரபு (பேரிடர் மேலாண்மை), விஜயலட்சுமி,  சக்திவேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top