Close
செப்டம்பர் 19, 2024 9:46 காலை

புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் சார்பில்  மருத்துவர்களுக்கு  விருதுகள் வழங்கல் 

புதுக்கோட்டை

புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க கிளையில் நடைபெற்ற மருத்துவர் தின விழா

புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் சார்பில்  மருத்துவர்களுக்கு  விருதுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கத்தில்  மருத்துவர் தின விழா  நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை தலைவர்  டாக்டர். ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

டாக்டர் முகமது சுல்தான் அனைவரையும் வரவேற்றார் கௌரவ விருந்தினராக இந்திய மருத்துவ சங்கம் ( மூத்த துணைத் தலைவர் தேர்வு புதுடெல்லி)  டாக்டர் ஆர் குணசேகரன்  கலந்து கொண்டு 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர்  விருதுகள், சிறப்புடன் பணியாற்றும்  புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி டாக்டர் ராஜ்மோகன்( முதல்வர் பொறுப்பு ) மற்றும்  முதன்மை மருத்துவர் டாக்டர் பெரியசாமி,

புதுக்கோட்டை
இந்திய மருத்துவ சங்கத்தில் மருத்துவர் தின விழா

டாக்டர் கோமதி, டாக்டர்  தையல்நாயகி, டாக்டர்  சாந்தி அருள்அமுதன், டாக்டர்  அப்துல்லத்திப், டாக்டர் அழகேசன், டாக்டர்  ரவிநாதன்  டாக்டர்  கல்யாணகுமார், டாக்டர்  சிவக்குமார் மற்றும்  டாக்டர்கள் ராஜாராமன்,  டாக்டர்  முனியன், டாக்டர்  ராமமூர்த்தி, டாக்டர்  ராமலிங்கம்,  டாக்டர்  மதியழகன்,  டாக்டர்  சரவணன்,  டாக்டர்  அகமதுமசூத், டாக்டர்  ரவிச்சந்திரன்  ஆகியோருக்கு விருதுகள்  வழங்கி  உரையாற்றினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடைபெற்ற மருத்துவர் தின விழா

நிகழ்வில்  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா,சென்னை இந்திய மருத்துவ சங்க டாக்டர் இளங்கோவன், முன்னாள்தலைவர்  சுவாமிநாதன் உள்ளிட்டோர்   பேசினார்கள்.

முன்னதாக   பரதநாட்டியம், இசை கச்சேரிகள் நடந்தது நிறைவாக  டாக்டர் சாரதா மணி நன்றிகூறினார்  விழா ஏற்பாடுகளை  நிதி செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top