புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டைகழகம், புதுக்கோட் டை மாவட்ட அமைச்சூர் தேக்வாண்டோ சங்கம் மற்றும் புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து நடத்திய மாவட்டங் களுக்கு இடையிலான நடுவர்கள் பயிற்சி முகாம் தொடக்க விழா புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தனர்.
திமுக மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விராலிமலை சந்திரசேகர்,செஞ்சுரி லைன் சங்கத்தின் தலைவர் மூர்த்தி , புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் சங்கர் முன்னிலை வகித்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண. மோகன்ராஜா, குத்துச்சண்டை கழக துணைச் செயலாளர் தங்கராஜ், 20 -ஆ வார்டு நகர் மன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு, 21 -ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நிஜாம் முகமது
ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்,
முகாமில், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 40 -க்கும் மேற்பட்ட நடுவர்கள் கலந்து கொண்டவர்களுக்கு சிலம்பம் , தேக்வாண்டோ,குத்துச் சண்டை ஆகிய கலைகளில் அவர்களுக்கு நடுவர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வருகின்ற காலகட்டங்களில் நடக்கும் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு பயிற்சி அளிக்கப் பட்டு தேர்வுகள் வைக்கப்பட்டு “அ” பிரிவு “ஆ” பிரிவு “இ” பிரிவு ஆகியவை தேர்வு முறையில் பிரிக்கப்பட்டு போட்டிக்கு பயன்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்த பயிற்சி 29, 30 சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்ற நடுவர்களுக்கு சான்றிதழ் களும் நினைவு பரிசுகளும் வழங்கப்படும் இதில் பங்கு கொள்ளும் அனைத்து நடுவர்களுக்கும் சீருடை, காலனி டை ஆகியவை வழங்கப்பட்டது.
முன்னதாக அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி துணை இயக்குனர் ரமேஷ் வரவேற்றார்.புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.