புத்தாஸ் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை, புதுக்கோட்டை மாவட்ட குத்துச் சண்டை கழகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் தேக்வாண்டோ சங்கம், இணைந்து நடத்திய மாவட்டங்களுக்கு இடையிலான நடுவர் பயிற்சி முகாம் புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ அம்மன் திருமண மண்டபத்தில் அண்மையில் (29.7.2023, 30.7.2023) நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசியதாவது: கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை யார் சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மட்டுமே சிறந்த தலைமை பண்புமிக்க தலைவர்களாக வர முடியும் என்றார்.
மாணவர்களிடம் கலந்துரையாடியபின் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
விழாவில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மாருதி கண. மோகன்ராஜா தலைமை வகித்தார். அதிமுக தெற்கு நகரச் செயலாளர் எஸ்ஏஎஸ். சேட் என்ற அப்துல் ரகுமான், அதிமுக வடக்கு நகர செயலாளர் க. பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நார்த்தாமலை ஆறுமுகம்,
நகர கூட்டுறவு வங்கியின் தலைவர் மாரிமுத்து கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயல் நாட்டார் கலை நடுவத்தின் தலைவர் கார்த்திக் ரகுநாத்,
பயிற்சி முகாமில் டேக்வாண்டோ தேர்வாளராக பயிற்சியளித்த கன்னியாகுமரி சாந்த சீலன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக புத்தாஸ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் சேது கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.பொருளாளர் ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார்.