Close
செப்டம்பர் 20, 2024 1:25 காலை

 சர்க்கரை நோய்,  பல் மற்றும் நுரையீரல் இலவச பரிசோதனை முகாம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், திருவப்பூர் சௌராஷ்ட்ரா சபை, துரைசாமி நர்சிங் ஹோம் மற்றும் பிரசாந்த் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மையம் நடத்திய இலவச மருத்துவ முகாம்

சர்க்கரை நோய்,  பல் பரிசோதனை மற்றும் நுரையீரல் இலவச பரிசோதனை முகாமை புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், திருவப்பூர் சௌராஷ்ட்ரா சபை, துரைசாமி நர்சிங் ஹோம் மற்றும் பிரசாந்த் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மையம் இணைந்து நடத்தினர்.

முகாமுக்கு சங்கத் தலைவர்  அசோகன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை திருவப்பூர் சௌராஷ்ட்டிரா சபை அரங்கத்தில் நடைபெற்றது.

முன்னதாக  அனைவரையும் சங்க ஆலோசகர் மாருதி கண.மோகன் ராஜா வரவேற்றார்.  நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி, குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் மேனாள் தலைவர்கள் பார்த்திபன், தனகோபால், சிவக்குமார், சங்கர் முன்னிலை வகித்தனர்.

2024- 25 -ஆம் ஆண்டின் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, புதிய உறுப்பினர்கள் முன்னாள்  நகர் மன்ற துணைத் தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான.சேட் என்ற அப்துல் ரகுமான், .நிஜாம் முகமது ஆகிய இரண்டு பேருக்கும் ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

சர்க்கரை நோய் மற்றும் பாத பிரச்னை சிறப்பு மருத்துவர் R.துரை நகரத்தினம், கலந்துகொண்டு பேசும்போது சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அறிகுறிகளே இல்லாத ஒரு காரணத்தினால் சர்க்கரை நோயின் வீரியத்தை கண்டறிவதோ அதற்கான சிகிச்சையில் தங்களை உட்படுத்துவதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

மருத்துவராக முன் நின்று சர்க்கரை நோயின் வீரியத்தை கண்டறிவது என்பது ஒரு தனி நபருக்கான சேவை மட்டுமல்ல. அவரை சார்ந்த மக்கள், குடும்பம் ஆகியவர்களுக்காக செய்யும் ஒரு தொண்டாகவே கருதப்பட வேண்டும்.

பரிசோதனையில் ஏதேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதை கண்டறிந்தால் கூட அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மிகப்பெரிய மருத்துவ செலவில் இருந்தும் உடல் ஆரோக்கியத்தை தற்காத்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் அமைகிறது.

சர்க்கரை நோயினால் பாத எரிச்சல், தீராத கால் புண், நடக்கும்போது செருப்பு கழண்டு விழுதல், பற்களில் ஏற்படும் பாதிப்புகள் இது அனைத்தையும் முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தற்காத்துக் கொள்வதற்கும் வருமுன் தடுப்பதற்கும் நாம் ஒரு வாய்ப்பை உருவாக்குகிறோம்.

எங்கள் சிகிச்சைக்கு ஆதரவு அளித்து சிகிச்சை பெற்ற சமுதாய மக்களுக்கு நன்றிக் கடனாகவே இலவச மருத்துவ முகாமை நாங்கள் நடத்துகிறோம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நுரையீரல் ஆத்மா அலர்ஜி மற்றும் தூக்க குறைபாடுகள் சிறப்பு சிகிச்சை நிபுணர்  பிரசாந்த் மற்றும் சிறப்பு பல் மருத்துவர் வி. தரணீஸ்வரி முகாம் மருத்துவர்களாக கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

முகாமில் கே.என். செல்வரத்தினம்,  நாகரத்தினம், வழக்கறிஞர் அ.சந்திரசேகர், தங்க ராஜா, பாரூக் ஜெய்லானி. மணிகண்டன், சேது கார்த்திகேயன்,  நாகராஜ் , தயாளன் கலந்து கொண்டனர்.

முகாமில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர் . நிகழ்ச்சியின் திட்ட இயக்குனர்களாக ஓம்ராஜ், ஸ்ரீதரன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். நிறைவாக செயலாளர் முத்தன் அரசகுமார் குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top