Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரம் விழா வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரம் விழா வெள்ளாளவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது .

இதில் லயன்ஸ் தலைவர்  அரவிந்த் தலைமை வகித்தார். ரஞ்சித்குமார் கலந்துகொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து கர்ப்பிணிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார் .

இதில், 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தனர். இதையொட்டி பெண்களுக்கு பேரீச்சை மற்றும் கடலைமிட்டாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, சுகாதார ஆய்வாளர் பழனிசாமி அருட்பிரகாசம் மற்றும் லயன்ஸ் சங்கத்தை சேர்ந்த சந்திரசேகர், சத்யமுர்த்தி, அபிராமி ஆகியோர் கலந்துகொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top