Close
நவம்பர் 22, 2024 12:39 காலை

எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி படிப்பு

புதுக்கோட்டை

தாட்கோ மூலம் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டப்படிப்பு

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி  B.Sc (Hospitality & Hotel Administration ) மூன்று வருட பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம்

சென்னை தாமணியிலுள்ள Insute of Hotel Management Catoring Technology & Applied:Nutrition நிறுவனமானது ISO 9001 2015 தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ், அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம்.

மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. Amencian Council of Business -ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. France நாட்டில் உள்ள Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Maragernent: Insitute Survey: 2022 ன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2 ஆவது இடம் பெற்றுள்ளது.

CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந் தோம்பல் மற்றும் ஹேட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13 ஆவது இடத்தில் இந்நிறுவனம்  இடம் பெற்றுள்ளது.

இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவிளஞர் (Craftmanship: Course in Food Production&Patisserie) உணவு மற்றும் பானசேவையில் கைவினைத்திறன் படிப்பு, (Craftmanship Course in Food & Beverage Service) பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு.

(Diplorna in Bakery & Confectionary) முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, (Diploma in Fornt Operation) ஹவுஸ் கீப்பிங் செயல் பாட்டில் பட்டயப்படிப்பு (Diploma in Housekeeping Operation), உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப் படிப்பு (Post Graduate Diploma in Dietetics & Hospital Food Service Post Graduzste) விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Accommodation Operation & Management) படிப்பில் சேர்ந்து படித்திடலாம்.

படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

இப்பயிற்சி பெற ஆகிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளத்தை சார்ந்தாவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் நேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம்  ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை பெறலாம். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 043222-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என: மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top