Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

சுதந்திர தினம்… காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் அதிகாரப் பிடியில் இருந்த இந்தியா, பலரது உயிர் தியாகத்தாலும் பல போராட்டங்களுக்கும் பிறகு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட்15-ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் பெற்றது.

இதன்படி, இந்தியா தனது முதல் சுதந்திர தினத்தை 1948-ஆம் ஆண்டு கொண்டாடியது. 10-வது சுதந்திர தினத்தை 1957-ஆம் ஆண்டிலும், 20-வது சுதந்திர தினத்தை 1967-ஆம்ஆண்டிலும் 30-வது சுதந்திர தினத்தை 1977-ஆம் ஆண்டிலும் கொண்டாடியது.

தொடர்ச்சியாக 50-வது சுதந்திர தினமானது, 1997-ஆம் ஆண்டு பொன்விழா என்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து 70-ஆவது சுதந்திர தினம் 2017-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. எனவே, இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை 2022-ம் ஆண்டு கொண்டாடும் என அறிவிக் கப்பட்டது.

 பிரதமர் மோடி கடந்த ஆண்டு(2022) மார்ச் மாதம் சுதந்திர தின அமுதப் பெருவிழா (ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ்) என்ற  நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 75 -ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடு வதற்கான 75 வார கவுண்ட்டவுன் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.

அதன்படி, ஆஸாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில்  75-ஆவது ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து  2023 -ல் நாட்டின் 76-ஆவது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 ல் கொண்டாடப்படவுள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முதலமைச்சர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த ஆட்சியர்கள் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யா தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

சுதந்திர தினத்தையொட்டி  காவல்துறையின் ஆயுதப்படை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் அணிவகுத்து ஆட்சியருக்கு மரியாதை செய்வது வழக்கம்.

இதற்கான அணி வகுப்பு ஒத்திகை புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை காலையில் நடைபெற்றது. இதில் அனைத்துப்பிரிவினரும் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். இதில் அணிவகுப்பு நேரம், முறையான அணிவகுப்பு, ஒலி சமிக்ஞைகள் ஆகியவை சரிபார்க்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top