Close
ஏப்ரல் 4, 2025 3:26 மணி

செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க. பிரேமலதா பொறுப்பு ஏற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க. பிரேமலதா

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க. பிரேமலதா இன்று(9.8.2023)  தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இவர்  அரியலூரில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். அங்கிருந்து  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்று கடந்த 2013 -ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில் பணியாற்றினார்.  பின்னர், திருச்சியிலும் அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் அங்கிருந்து பணியிட மாறுதல் மூலம்  மீண்டும் புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக புதன்கிழமை (9.8.2023)  பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இவருக்கு  பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நேரில்  வாழ்த்துத் தெரிவித்தனர்.

ஏற்கெனவே புதுக்கோட்டையில் பணியாற்றிய மதியழகன் தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள்  தொடர்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top