தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரெ.மதியழகன் (9.8.2023) தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இவர் அரியலூரில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார். அங்கிருந்து ஈரோடு, கோவை மாநகராட்சி, ஊட்டி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார்.
பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2021 –ல் புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார்.
இந்நிலையில் இங்கிருந்து பணியிட மாறுதல் மூலம் தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ரெ. மதியழகன் புதன்கிழமை (9.8.2023) பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இவருக்கு பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள், அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
ஏற்கெனவே தஞ்சாவூரில் பணியாற்றிய வந்த க. பிரேமலதா புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.