Close
செப்டம்பர் 20, 2024 1:30 காலை

தஞ்சையில் மாபெரும் தமிழ்க்கனவு பண்பாட்டுப் பரப்புரை

தமிழ்நாடு

தஞ்சையில் மாபெரும் தமிழ்க்கனவு பண்பாட்டு பரப்புரை

தஞ்சாவூர்  புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள புதிய மாநாட்டு மையக்கட்டிடத்தில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர்    தீபக் ஜேக்கப் தலைமையில்  (11.08.2023) நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர்  தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது:தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பின்புறமுள்ள புதிய மாநாட்டு மையக்கட்டிடத்தில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்  செந்தில்வேல் “கவித்தமிழ்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற் றினார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடு களில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு, குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும்.

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் – நாகரிகமும் தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், திசைதோறும் திராவிடம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தோற்றமும் தொழில் முனைவுக்கான முன்னெடுப் புகள், வளர்ச்சியும், கணினித் தமிழ் வளர்ச்சியும் தமிழ்நாட்டில் சுற்றுலா வாய்ப்புகள், நூற்றாண்டு கண்ட ஊடகங்களின் சவால்களும்.

கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் செயல் படுத்தும் முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ஆகவே நீங்கள் அனைவரும் தமிழின் பெருமைகள் கேட்டறிந்தும், மேலும், இந்நிகழ்ச்சியில் உங்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை மாணவர்கள் தவறாது படித்து பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்  தெரிவித்தார்.

மேற்கண்ட நிகழ்வில் பங்கேற்ற மாணவ மாணவிகள்;‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாரட்டி பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டன.

சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி,  கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள்  துரை சந்திரசேகரன் (திருவையாறு),  டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), மாநகராட்சி மேயர் சண். இராமநாதன்,மாவட்ட வருவாய் அலுவலர்  தெ. தியாகராஜன்,மாவட்ட ஊராட்சித் தலைவர்  உஷா புண்ணியமூர்த்தி.

மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர்  த. சரவணக்குமார், மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் நா. தனராஜன்,வருவாய் கோட்டாட்சியர்  பழனிவேல்(பொ), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  தவவளவன் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top