Close
நவம்பர் 22, 2024 11:17 காலை

பயன்பாடற்ற கிணறு, ஆழ்துளைக் கிணறுகளில் விபத்து முன்னெச்சரிக் கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை

கைவிடப்பட்ட கிணறுகள் அருகே பாதுகாப்பு எச்சரிக்கை பலகை தடுப்பு அமைக்க வேண்டும்

தமிழகத்தில் கைவிடப்பட்ட திறந்த நிலைக் கிணறுகள், பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் கைவிடப்பட்ட குவாரி ஊற்றுகளில் ஏற்படும் விபத்துகள் காரணமாக உயிரிழப்பு ஏற்படுவதால் உரிய பாதுகாப்பு  எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக அரசு அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்கள் நிலத்தில் உள்ள மேற்படி கைவிடப்பட்ட திறந்த நிலைக் கிணறுகள் மற்றும் பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளைச் சுற்றி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் செல்லாத வண்ணம் சுற்றுச்சுவர் அமைத்தும், மூடி வைத்தும், அதனருகில் எச்சரிக்கை பலகை வைத்தும் விபத்துக்கள் ஏற்படாத வகையில்  தடுப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கைவிடப்பட்ட குவாரிகளில் அமைந்துள்ள நீர்நிலை களில் குளிப்பதைத் தவிர்க்க்க வேண்டும். பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் எனில்  தேவையான  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top